ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 354 ஆக உயர்வு

" alt="" aria-hidden="true" />

டெஹ்ரான்:

 


ஈரான் நாட்டில் மந்திரிகள் உள்பட சில முக்கிய பிரமுகர்கள் கொரோனா பாதிப்புக்கு பலியான நிலையில் பல அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அங்கு பொது மக்களிடையே கடும் பீதி நிலவி வருகிறது.


 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளான ஈரானில் இன்று மேலும் 63 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது.

 

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் கியானோஷ் ஜஹான்போர் கூறுகையில், ஈரானில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

 

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 63 பேர் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்