பெங்களூர்:
கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிகளை சித்தராமையாவும் ராஜினாமா செய்தார்கள்.
டெல்லி சட்டசபை தேர்தல், மாநில தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் இடையே போட்டி, கருத்து வேறுபாடுகள் ஆகிய காரணங்களால் மாநில தலைவரை நியமிக்காமல் காங்கிரஸ் மேலிடம் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் 2 மாதத்திற்கும் மேலாக கர்நாடக மாநில காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டிகே சிவகுமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அத்துடன், செயல் தலைவர்களாக 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈஷ்வர் காண்ட்ரே, சதீஷ் ஜர்கிஹோலி, சலீம் அகமது ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல், டெல்லி முன்னாள் எம்.எல்.ஏ அனில் சவுத்ரி காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்